சென்னை:
மத்திய அரசிடம் இருந்து பணம் வந்த பின், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி:
ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு வகையில், மூன்று அல்லது நான்கு மாத தாமதத்திற்கு பின், 13 வகை கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இந்த முறை 1,141 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்களை, பள்ளி துவங்கும் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளோம்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு வர வேண்டிய 600 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை சார்பில், மத்திய அரசிடம் கடந்த மாதம் நேரடியாக வலியுறுத்தி உள்ளோம்.