விமானப் படை வேலை வாய்ப்பு தேர்வு; 284 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன?

இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 284 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விமானப் படையில் வேலை பார்க்க விரும்புபவர்கள் ஜூலை 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பணியிடங்களின் விவரம்

AFCAT Entry 

காலியிடங்களின் எண்ணிக்கை: 284

Flying – 3 (ஆண்கள் – 1, பெண்கள் – 2)

Ground Duty (Technical) – 156 (ஆண்கள் – 123, பெண்கள் – 33)

Ground Duty (Non-Technical) – 125 (ஆண்கள் – 98, பெண்கள் – 27)

வயதுத் தகுதி: Flying பணியிடங்களுக்கு 20 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற பணியிடங்களுக்கு 20 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: Flying பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.

Ground Duty (Technical) பணியிடங்களுக்கு ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு https://afcat.cdac.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம்: ரூ. 550

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.07.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *