TNEA 2025: வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்; தமிழக டாப் கல்லூரிகள் இவைதான்!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; எதிர்கால வேலை வாய்ப்பு எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பதாக கணிக்கும் நிபுணர்கள்; தமிழகத்தில் படிக்க டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், வேலை வாய்ப்புகளை கொட்டிக் கொடுக்கக் கூடிய எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளை படிக்க தமிழகத்தில் உள்ள டாப் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டு கட் ஆஃப் சற்று அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம் எலக்ட்ரானிக்ஸ் துறையும் முன்னணியில் உள்ளது. எதிர்காலத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில், எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளை படிக்க தமிழகத்தில் உள்ள டாப் 25 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

டாப் 25 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள்

1). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை

2). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

3). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை

4). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை

5). தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை

6). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்

7). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை

8). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

9). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

10). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை

11). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

12). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

13). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

14). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்

15). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு

16). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை

17). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

18). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

19). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

20). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

21). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை

22). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு

23). டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

24). சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்

25). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ், சிவகாசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *