டைப்ரைட்டிங் தேர்வையும் அலுவலக தானியங்கி கணினிப் பயிற்சித் திட்டத்தின் (COA) சான்றிதழ் பாடத் திட்டத்தையும் ஒரே சான்றிதழ் பாடத்திட்டமாக இணைக்கும் அரசின் முடிவிற்கு தமிழ்நாடு வணிகவியல் நிறுவனங்கள் சங்கம் (TNCIA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டைப்ரைட்டிங் தேர்வையும் அலுவலக தானியங்கி கணினிப் பயிற்சித் திட்டத்தின் (COA) சான்றிதழ் பாடத் திட்டத்தையும் ஒரே சான்றிதழ் பாடத்திட்டமாக இணைக்கும் அரசின் முடிவிற்கு தமிழ்நாடு வணிகவியல் நிறுவனங்கள் சங்கம் (TNCIA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வணிகவியல் நிறுவனங்கள்சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அரசின் இந்த முடிவு மாநிலம் முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்ற சுமார் 5,000 தட்டச்சு நிறுவனங்களைப் பாதிக்கும் என்று கூறிப்பட்டுள்ளது. 2027 முதல் கணினிகள் மூலம் டைப்ரைட்டிங் தேர்வை நடத்தும் முடிவு, இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஏராளமான ஆசிரியர்கள், பழுதுபார்ப்பவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். டைப்ரைட்டிங் தேர்வுகள் தட்டச்சுப் பொறிகளிலேயே நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் ரத்து செய்திட வேண்டும் என்று கூறி தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் சார்பில் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் 4 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், தட்டச்சுத் தேர்வினை சுமார் 5ஆயிரம் அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பள்ளிகளின் 2 லட்சம் தட்டச்சு இயந்திரங்கள் மூலமாக மட்டுமே தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எப்பொழுதும் போல் நடத்திட வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பள்ளிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன் கணினித் தேர்வினை நடத்திடவும், குறைந்தபட்ச கல்வித் தகுதியான தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்களையே சிஓஏ தேர்வு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.