வயதான தமிழ் அறிஞர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் – விண்ணப்பிக்க சொல்லும் தமிழக அரசு

தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க கோரி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.8000/- உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.


2025-2026ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை, இந்தாண்டு முதல் 150 தமிழறிஞர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் இணைய வழியிலும் நேரிலும் பெறப்படுகிறது. –

நேரில் :-
மண்டில/ மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/ உதவி இயக்குநர் அலுவலகம்- சென்னை.

கடைசி நாள்: 17.11.2025

இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tamilvalarchithurai.tn.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *