நள்ளிரவில் “புதிய தலைமுறை” செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் “புதிய தலைமுறை” செய்தி தொலைக்காட்சி; “ஜெயா டிவி” தொலைக்காட்சி “புதுயுகம் தொலைக்காட்சி” ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் பிரச்சனை என்னவென்றால் நேற்று நள்ளிரவில் ஈக்காட்டுத்தாங்கல் பகுதி காவல்துறையினருக்கு புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக சொல்லபடுகிறது.
வெடிகுண்டு சோதனை:-
இதையடுத்து, புதிய தலைமுறை அலுவலகத்தில் நள்ளிரவில் காவல்துறையினர் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டோ! அல்லது அது வைப்பதற்கான முயற்சிகள் ஈடுபட்டதற்கோ! எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. இதையடுத்து காவல்துறை தரப்பில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி தான் என்று விளக்கமளித்தனர்.
நள்ளிரவில், ஒரு ஊடக நிறுவனத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவனிக்க வேண்டியது:-
ஏற்கனவே, தமிழ்நாடு அரசு கேபிள் இணைப்பில் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி தெரியவில்லை. முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும்; ஊடகவியலாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
