எஸ்ஐஆர் தொடர்பான வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பிஹாரில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், அங்கு முன்னதாக எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு, இந்தியா’ கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எஸ்ஐஆர் பணிகள் நடக்கும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மனுக்களை அரசியல் கட்சியினர், தனி நபர்கள் மற்றும் சமூக அமைப்பினர் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம்டு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் புதிய மனுக்களை இனி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *