தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று (டிசம்பர் 11) தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தேர்தலுக்குப் பயன்படுத்த பயன்படுத்த 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களில் முதல் நிலை சரி பார்ப்பு பணி நாளை (டிசம்பர் 12) முதல் தொடங்கி ஜனவரி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உள்ளது. பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து பிரதிநிதிகள் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது. இதன்படி பிரதிநிதிகள் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் நாட்களில் காலை 8.45 மணி முதல் மாலை 7 மணிவரை இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் இருக்க வேண்டும்.
முதல் நிலை சரிபார்ப்பு பணியின் நிறைவாக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தவறாது மாதிரி வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. முதல் நிலை சரிபார்ப்பு பணியில் பழுதானது என கண்டறியப்படும் இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவித்துள்ளது.
