வயதை வென்ற வசீகரம்…ரஜினிகாந்திற்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் வயதை வென்ற வசீகரம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், ” ரஜினிகாந்த் வயதை வென்ற வசீகரம். மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்.

ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar Rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *