நீலகிரி : பள்ளி மாணவர்கள், தோடர் இன மக்களுடன் பொங்கல் கொண்டாடிய ராகுல்காந்தி

தமிழகம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பொங்கல் வைத்து, பள்ளி மாணவர்களுடன் உரையாற்றி, பொங்கல் வைத்து,  பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் வந்த ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். கர்நாடகாவில் இருந்து ஹெலிகப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு ராகுல் காந்தி வந்தார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல் காந்தி மாணவ-மாணவியர் மத்தியில் உரையாற்றினார். முன்னதாக, கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொங்கல் விழாவில் ராகுல் காந்தி

இதனை தொடர்ந்து பள்ளியின் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூடலூரில் உள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பொங்கல் வைத்தார்.

அப்போது ராகுல் காந்தி தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தார்.
இந்த பொங்கல் விழாவில், ராகுல் காந்தி பெண்களுடன் சேர்ந்து மண்பானையில் பொங்கல் வைத்தார்.

மாணவர்களுடன் பேசிய ராகுல் காந்தி

இதனை தொடர்ந்து, மாணவர்களிடம் உரையாடுற்ற ராகுல் காந்தி, “கல்வி தனியார்மயமாகக்கூடாது. மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். ஆண்களைவிட பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்; ஐ.டி. துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

இந்த நிகழச்சியில் மாணவ-மாணவியர், பெண்கள், ஆசிரியர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *