பொங்கலுக்கு வரவில்லை – நேதாஜி பிறந்தநாளில் வெளியாகும் ‘திரௌபதி-2’

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 23ம் தேதி “திரௌபதி-2” திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


நடிகர் ரிச்சர்ட் ரிஷி, நடிகை ரக்‌ஷனஇந்துசூடன், நட்டி, வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

​வெளியீட்டு தேதி

​முதலில் “திரௌபதி-2” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று, அதன் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஜனவரி 23 அன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது.

கதைக்களம்

இது 2020-ல் வெளியான ‘திரௌபதி’ படத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், கதை முற்றிலும் மாறுபட்ட ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது.

14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட ஹொய்சாளப் பேரரசர் மூன்றாம் வீர வல்லாள மகாராஜாவின் வரலாறு மற்றும் செந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரத்தைப் பற்றியும் இப்படம் பேசுகிறது.

முகலாயர்கள் தமிழகத்தில் கால்பதித்த போது நடந்த போராட்டங்களும், கலாச்சார மாற்றங்கள் பற்றி இப்படத்தில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

​​ சென்சார் சான்றிதழ் வாங்கிய ‘திரௌபதி-2”

​இப்படம் மிகக் குறுகிய காலத்தில், அதாவது 31 நாட்களில் படமாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. சென்சார் வாரியம் இப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *