பண மோசடியில் ஈடுபடுகிறாரா அண்புமணி? தந்தை ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

அன்புமணி விருப்பமனு என்ற பெயரில் பண மோசடி ஈடுபடுகிறார் என்று தந்தை ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ரூ.10,000 – ரூ.5,000/ மட்டுமே!

வரும் 2026 தேர்தலில் பாட்டாளி மக்கள் சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என அன்புமணி அறிவித்திருந்தார். பொது தொகுதிக்கு ரூ.10,000, தனித் தொகுதிக்கு ரூ.5,000 செலுத்தி மனுவை பெறலாம் என்றும் கூறியிருந்தார்.

தந்தை – மகன் சண்டை

பாட்டாளி மக்கள் கட்சியில் அப்பா ராமதாஸ் ஒரு பக்கமும்; மகன் அன்புமணி ஒரு பக்கம் என பிரிந்து இருக்கிறார்கள். இதனால் பாட்டாளி மக்கள் கட்சி இரு பிரிவாக பிரிந்துள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக கட்சி இருப்பது அன்புமணி தரப்பிடமா? இல்லை ராமதாஸ் தரப்பிடமா? என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

இதற்கு இடையில், முன்னாள் மத்திய அமைச்சரான அன்புமணி தரப்பினர் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பாமக தொண்டர்களிடம் தொடங்கியுள்ளனர். இது பாமக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பனையூர் அலுவலகம்

பாட்டாளி மக்கள் கட்சியின் பனையூர் அலுவலகத்தில் மருத்துவர் அன்புமணி தலைமையில், விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விருப்ப மனுவில் ஒரு பக்கம் அன்புமணியின் புகைப்படமும்; மற்றொரு பக்கம் ராமதாஸ் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி பணமோசடி செய்கிறார்: ராமதாஸ்

இந்த விவகாரம் குறித்து ராமதாஸ் “பாமக பெயரையோ, கொடியையோ அன்புமணி பயன்படுத்த உரிமை இல்லை” என கூறியுள்ளார். மேலும், விருப்ப மனு என்ற பெயரில் அவர் பணமோசடியில் ஈடுபடுவதாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை டிஜிபி-யிடமும் ராமதாஸ் தரப்பு மின்னஞ்சல் மூலம் புகார் மனு அளித்துள்ளது.

தந்தை – மகன் சண்டையால் தற்போது பாமக வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? அமைக்க போகிறது என்று தெரியாமல் உள்ளதோடு, பாமக கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *