குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நல பிரச்னைகளை தடுப்பதோடு, சரும் பொலிவையும் காக்கும் தன்மை பழங்களுக்கு உண்டு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குளிர்காலத்தில் எந்தெந்த பழங்கள் என்னென்ன நன்மைகளை அளிக்கின்றன என்பதை பார்ப்போம்!

ஆப்பிள் – அழற்சியை கட்டுப்படுத்த உதவும், நாள்பட்ட நோய்களை குணப்படுத்தும்
மாதுளம் – நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும், உடலில் இரும்புச்சத்து அளவை அதிகரிக்கும்
சீத்தாப்பழம் – செரிமானத்தை துரிதப்படுத்தும், அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்கும்
ஆரஞ்சு – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சப்போட்டா – எலும்புகளை பலப்படுத்தும், ஆன்டி-ஆக்சிடெண்ட்கள் உடலை காக்கும்
கொய்யா – உடலில் பாக்டீரியா எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும்
நெல்லிக்காய் – இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்
இன்னும் பல பழங்கள் இருக்கின்றன. அனைத்து பழங்களிலும் ஒவ்வொரு விதமான நன்மைகள் உண்டு. நம்முடைய உடலுக்கேற்ற அளவில் நல்ல பழங்களை சாப்பிடுவது அவசியமான ஒன்று.
