அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் ஜான் ஜூனியருக்கு நிச்சயதார்த்தம் வெள்ளை மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பின் முதல் மனைவி இவானா டிரம்ப். இந்த தம்பதியரின் மூத்த மகன் டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர். தொழிலதிபரான இவர், டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு 5 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் 2018-ம் ஆண்டு மனம் ஒத்து பிரிவதாக அறிவித்து பிரிந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல், பெட்டினா ஆண்டர்சன் என்ற பெண்ணை டொனால்ட் டிரம்ப் ஜூனியர் காதலித்து வந்தார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் வெள்ளை மாளிகையில் திருமண நிச்சயதார்தம் நடந்தது. இந்த நிகழ்வில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
