மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி பதிலடி!

ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்டுவதாக கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று(டிசம்பர் 31) சாமி தரிசனம் செய்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழ்நாடு அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

இந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினருமான கனிமொழி அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *