விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? – பாஜக நிர்வாகி, நடிகை குஷ்பு கேள்வி

புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை குஷ்பு பங்கேற்றார். அதன்பிறகு, நிருபர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தது நிச்சயம் பலனளிக்கும். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. அதை அமித்ஷாவே உறுதிப்படுத் தியுள்ளார். பாஜகவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்று கூறியுள்ளார்.


நாங்கள் பிரித்துப் பார்க்க வில்லை. பிரதமர் ஒரு திட் டம் கொண்டு வரும் பொழுது தமிழ்நாட்டிற்கும், சேர்த்துதான் கொண்டு வரு கிறார் தமிழ்நாட்டுக்கு இல்லை என்று சொல்ல வில்லை என்றார்.

அது ஓட்டாகமாறுமா?

மேலும், ‘விஜய் மாபெரும் நடிகர். தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஸ்டார் விஜய். 1992-93-ல் ரஜினி எப்படி இருந்தாரோ! அதேபோல் தற்போது மிகப்பெரிய ஸ்டாராக விஜய் தான் இருக்கிறார். விஜயைப் பார்க்க பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும் ஆனால் நடிகரை பார்க்க வரும் கூட்டம், அது ஓட்டாகமாறுமா? என்பதை சொல்ல முடி யாது, இதற்கு முன்பு பல தேர்தல்களை நாம் பார்த்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டு பேசினார்.

“மக்களை ஏமாற்றும் வேலையை காங்கிரஸ் திமுக கூட்டணி செய்து வருகிறது. இப்போது ஏதோ ஒன்றைச் சொல்லி ஏமாற்று கின்றனர் என்றும் பாஜக மாநில நிர்ரவாகியும், நடிகையுமான குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *