விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படடு விட்டதை குறிக்கும் வகையில் காங்கிரஸ் தொழில்நுட்ப மற்றும் தரவுப் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
விசில் சின்னம் – சர்ச்சை பதிவு
பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில்,”தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது. இப்போது அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஓட்டத்திற்கு தயாராி விட்டன” என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக உடன் கூட்டணி..?
ஏற்கனவே, தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ்-திமுக கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதேசமயத்தில், காங்கிரஸ் தலைமை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி, திமுக உடன் தான் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
