தேசிய தேர்வு முகமை நடத்தும், 2026-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ (JEE) 2ஆம் கட்டத் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்தவும் பிப்ரவரி 25ஆம் தேதியே கடைசி நாளாகும்.
இரண்டாம் கட்டத் தேர்வுகள் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ழஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.

விண்ணப்பிக்க விரும்புவோர்,
முதலில் http://jeemain.nta.nic.in அல்லது examinationservices.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு பாடத்திட்டம் (:
இந்தத் தேர்வு இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), மற்றும் கணிதம் (Mathematics) ஆகிய மூன்று பாடங்களில் இருந்து தலா 30 கேள்விகள் வீதம் மொத்தம் 90 கேள்விகளைக் கொண்டிருக்கும் (இதில் 75 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்).
தேர்வில் வெற்றி பெற சில ரகசியங்கள்!
- நேர மேலாண்மை: மூன்று மணி நேரத்தில் 75 கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். ஒரு கேள்விக்கு 2 நிமிடங்களுக்கு மேல் செலவிடாதீர்கள்.
- நெகட்டிவ் மார்க்கிங்: ஒரு சரியான பதிலுக்கு +4 மதிப்பெண்கள், ஆனால் தவறான பதிலுக்கு -1 மதிப்பெண் கழிக்கப்படும். தெரியாத கேள்விகளைத் தவிர்ப்பது நல்லது.
- முந்தைய ஆண்டு தாள்கள்: கடந்த 5 ஆண்டுகால வினாத்தாள்களைத் தீர்த்துப் பார்த்தாலே 50% தேர்வுக்குத் தயாரானது போன்றது.
