சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

இதே போன்று, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்ட பொதுத்தேர்வு வரும் 17 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி நிறைவடையும் என அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பரிக்ஷா சங்கம் என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் விநியோகம் :-

இந்த வலைதளத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களின் உள்ளீட்டு அடையாளங்களை பதிவிட்டு மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ (CBSC) பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் தனிப்பட்ட முறையில் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும், பள்ளிகள் வாயிலாக மட்டுமே ஹால்டிக்கெட்களை பெற முடியும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

ஹால் டிக்கெட்டில் பெயர், புகைப்படம், பதிவெண், தேர்வு தேதிகள், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *