சினிமா பிரபலங்கள், அரசு உயர்மட்ட அதிகாரிகள், தொழில் அதிபர்கள் வந்து தங்கும் சென்னை ஈசிஆர் சாலை சொகுசு விடுதிகளில் சில இன்ஸ்டாகிராம் பெண் பிரபலங்களை வரவழைத்து பார்ட்டி, குத்தாட்டம் என சகலமும் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
என்ன நடக்கிறது அங்கே?
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சில சொகுசு விடுதிகள் விடுமுறை நாட்களில், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் உல்லாச விடுதிகளாக செயல்படும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த உல்லாச விடுதிகளில் சினிமா பிரபலங்கள்; சின்னத்திரை பிரபலங்கள்; பெரும் பணக்காரர்கள் வந்து தங்கி செல்வது வழக்கம்.
இந்த சொகுசு விடுதிகளுக்கு சினிமா நடிகைகள்; சின்னத்திரை நடிகைகள்; பல வெளிமாநில பெண்களும் வந்து செல்வார்கள். இதுகுறித்து காவல் துறையினருக்கும், சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கும் விவரங்கள் தெரிந்தாலும் பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு பின்னால் அரசியல் பின்புலம் இருப்பதால் யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை என்ற பேச்சும் உள்ளது.
பெண் இன்ஸ்டாகிராம் பிரபலமாம்..!
தற்போது விவகாரம் என்னவென்றால் சினிமா, சீரியல் நடிகைகள், தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் இவர்களை தாண்டி பெண் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு தற்போது மவுஸ் அதிகரித்துள்ளது. இதற்கென்ன இருக்கும் தரகர்கள் பெண் இன்ஸ்டாகிராம் பிரபங்களை குறிவைத்து அவர்களை இந்த உல்லாச விடுதிகளுக்கு வர வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில அரசு உயர் அதிகாரிகளும் கூட இந்த மாதிரியான இன்ஸ்டாகிராம் பெண் பிரபலங்களை விரும்புவதாக பேசப்படுகிறது.
நடவடிக்கை இல்லை; வேடிக்கை மட்டுமே!
இந்தக் கருப்பு திரைக்குப் பின்னால் என்னென்ன நடக்கிறது? யார்..? யார்.? சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரிந்தும் கூட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்பது சென்னை ஈசிஆர் மற்றும் அதனை சுற்றி வசிக்கும் பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.