அன்புமணிக்கு போட்டியாக போராட்டம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி டிசம்பர் .5-ம் தேதி அறவழி தொடர் முழக்கப்போராட்டம் நடததப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி மாநிலம் முழுவதும் வருகிற டிசம்பர் 5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும். அன்றைய தினம் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அறவழி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

வன்னியருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக தலைவர் அன்புமணி டிச.17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்த நிலையில் ராமதாஸ் டிசம்பவர் .5-ம் தேதி போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *