உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதி 3 பேர் பலியானார்கள்.
சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி டேங்கர் லாரி இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த லாரி உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்பியன் மாதேவி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் ஓட்டுநர் திடீரென லாரியை அதன் பாதையில் இருந்து திருப்பியுள்ளார். அப்போது அதே திசையில் பின்னால் வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மொதியது.
இதில் காரில் இருந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த எலவனாசூர் கோட்டை போலீஸார், பலியான மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அத்துடன் உயிர் இழந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
