பொது மக்களின் கோரிக்கை மனுகளை வாங்கும் திங்கட்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![]()
![]()
![]()
அரசு ஊழியர்கள் போராட்டம்:-
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு தாலுக்கா பகுதிகளிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் அவ்வபோது ஈடுபட்டு வருகிறார்கள்.
கோரிக்கைகள்..?
“கொத்தடிமை போல எங்களை நடத்தக்கூடாது;
வேலை நேரத்தின் கால அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்;
விடுமுறை நாட்களிலும் கட்டாயப்படுத்தி அலுவலகத்திற்கு வர வைக்கக் கூடாது;
திடீர்! திடீர்! என்று பணி மாறுதல் செய்வது
அடிக்கடி முகாம்கள் நடத்துவதால் அலுவலக வேலைகள் பாதிப்பதால் முகாம்களை குறைத்துக் கொள்ள வேண்டும்… உள்ளிட்ட கோரிக்கைகளை முன்நிறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இவர்களுடன், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நதிநீர் வேளாண்மை துறை என பல்வேறு அரசு துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
![]()

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
அந்தவகையில், இன்று காலை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் பகுதியில் நுழைவு வாயிலுக்கு அருகில் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எங்களது கோரிக்கைகளை கேட்பதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் நேரில் வரவேண்டும்” என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கூறுவதாவது, “எங்களின் கோரிக்கைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை, அரசு உயர்மட்ட அதிகாரிகளும் இதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்.., இதனை மேலிடத்திற்கு கொண்டு செய்கிறோம் என்று சொல்கிறார்களே..! தவிர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
