இஸ்லாமியர்கள் துல் ஹிஜ்ஜா மாதத்தில், ஈத் அல் அதா பண்டிகையை கொண்டாடுவதற்கு முன் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என குர்ஆன் சொல்கிறது. ஆனால் அனைவராலும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடியாது. அப்படி ஹஜ் யாத்திரை செல்ல முடியாதவர்கள் என்னென்ன சடங்குகளை மேற்கொண்டால் அல்லாஹ்வின் அருளை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
துல் ஹிஜ்ஜா மாதத்தில் மெக்கா நகரில் ஹஜ் யாத்திரைக்காக முஸ்லிம்கள் கூடும் இந்த புனித நேரத்தில், பயணம் செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்தே சில இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெறலாம். துல் ஹிஜ்ஜா ஒன்பதாம் நாள் அரஃபா தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்று அல்லாஹ், பாவங்களை மன்னித்து அருள்புரிகிறார் என்று நம்பப்படுகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஜூன் 5-ம் தேதியும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஜூன் 6 அல்லது 7 தேதிகளில் அரஃபா தினம் அனுசரிக்கப்படலாம்.
அரஃபா தினம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் படி பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 9 ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. அரஃபா தினம் அன்று மெக்காவிற்கு ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமியர் அரஃபா குன்று அருகில் உள்ள மைதானத்தில் ஹஜ் உடைய காரியங்கள் செய்வர். ஹஜ் பெருநாளைக்கு முதல் தினம் அரஃபா தினமாகும். துல் ஹிஜ்ஜா ஒன்பதாம் நாள் அரஃபா தினம் ஆகும். அன்று ஹஜ் யாத்திரை செய்பவர்கள் அரஃபா மைதானத்தில் கூடுகிறார்கள். ஹஜ் யாத்திரை மேற்கொள்வது குர்ஆன் வலியுறுத்தும் இஸ்லாத்தின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்று. ஹஜ் செய்ய முடியாதவர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது மசூதிகளிலோ இறை வழிபாடுகளில் ஈடுபடலாம்.
அரஃபா தினம் முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமான நாள். அன்று அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்கும் நாள். அன்றைய தினம் அல்லாஹ் பாவங்களை மன்னிக்கிறார் என்று நம்பப்படுகிறது. நபிகள் நாயகம் கூறியதாக, “அல்லாஹ் அரஃபா நாளில் மக்களை நரகத்திலிருந்து விடுதலை செய்வதை விட வேறு எந்த நாளிலும் அதிகமாக விடுதலை செய்வதில்லை” என்று கூறப்படுகிறது.
அரஃபா தினத்தில் செய்ய வேண்டிய 6 கடமைகள்:
1. நோன்பு: ஹஜ் செல்ல முடியாத முஸ்லிம்கள் அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது மிகவும் சிறந்தது. அன்று நோன்பு நோற்பதால் முந்தைய மற்றும் அடுத்த வருட பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
2. துஆ மற்றும் திக்ர்: அரஃபா தினத்தில் முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் துஆ செய்து, திக்ர் செய்ய வேண்டும். தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கு மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பாவ மன்னிப்பு, கருணை மற்றும் ஆசீர்வாதங்களை கேட்க வேண்டும்.
3. சிறப்பு தொழுகை: ஹஜ் செய்பவர்கள் அரஃபா மைதானத்தில் இருப்பதைப் போல, ஹஜ் செய்ய முடியாதவர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது மசூதிகளிலோ இறை வழிபாடுகளில் ஈடுபடலாம். குர்ஆன் ஓதுதல் மற்றும் அல்லாஹ்வுடனான உறவை நினைத்து பிரார்த்தனை செய்யலாம்.
4. தானம்: அரஃபா தினத்தில் ஏழைகளுக்கு தானம் செய்வது மிகவும் சிறந்தது.
5. தன்னம்பிக்கை மற்றும் பாவமன்னிப்பு: அரஃபா தினம் என்பது தன்னம்பிக்கை மற்றும் பாவமன்னிப்பு கேட்கும் நாள். தங்கள் தவறுகளை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
6. கொண்டாட்டம் மற்றும் நன்றி: அரஃபா தினம் முஸ்லிம்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நாள். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நாள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுதல், வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது மற்றும் இனிப்பு உணவுகளை உண்ணுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.