தாறுமாறாக ஏறும் தங்கம் விலை: ஒரு சவரன் 1 லட்ச ரூபாயை நெருங்கும் அபாயம்

சென்னையில் இன்று (டிசம்பர் 18) ஒரு சவரன் தங்கம் 99,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்து 12,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் தங்கம் 400 ரூபாய் உயர்ந்து 99,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இ தேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் 30 ரூபாய் உயர்ந்து 10,380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 2 ரூபாய் உயர்ந்து 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 2,000 ரூபாய் உயர்ந்து 2,24,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *