சற்றே குறைந்தது தங்கம் விலை: ஒரு சவரன் 99,040 ரூபாய்!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு .480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 99,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்களும், உலகின் பல்வேறு நாடுகளும், தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்வதால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஆபரண தங்கம் கிராம் நேற்று முன்தினம் , 12,400 ரூபாய்க்கும், சவரன், 99,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 222 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தங்கம் விலை நேற்று கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 12,440 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 99,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து, 224 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.19) சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 99,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 12,380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 221 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *