சென்னையில் தங்கம், வெள்ளி விலை இன்று(டிசம்பர் 5) அதிரடியாக குறைந்துள்ளது.
சர்வதேச விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ம் தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 96,560 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் பின்னர் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12,000 ரூபாய்க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் .96,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.4000 வரை குறைந்து பார் வெள்ளி 1,96,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
