தங்கம் விலை இன்று சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,00560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. இந்த வகையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று (டிச.22) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி தங்கம் விலை இன்று கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12,480 ரூபாய்க்கு விற்றது. இதனால் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 99,840 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்து ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12,570 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 1,00560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 231 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
