ஒரே நாளில் ரூ.10 ஆயிரம் உயர்வு…தங்கம், வெள்ளி வரலாறு காணாத விலை உயர்வு

சென்னையில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ஒரே நாளில் 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டாகவே தங்கம் விலை ஏற்றம், இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதன் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது அதிக அளவில் முதலீடு செய்வதால் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில், டிசம்பர் 15-ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் சவரன் 1 லட்சத்து, 120 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. இதன் பின் சற்று விலை குறைந்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 170 ரூபாய் உயர்ந்து, 12,570 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 560 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 231 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234க்கு விற்பனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *