சென்னையில் தங்கம் விலை இன்று (டிசம்பர் 23) சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது.இந்த மாதம் டிச.15-ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் சவரன், 1 லட்சத்து, 120 ரூபாய்க்கு விற்பனையானது. இதன் பின் விலை சற்று குறைந்தது. கடந்த சனிக்கிழமை (டிச.20) தங்கம் கிராம், 12,400 ரூபாய்க்கும், சவரன், 99,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 226 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கச் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 12,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 99,840 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 231 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று மாலையில், மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 12,570 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 1,00,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று (டிசம்பர் 23) சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு .200 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் 234 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
