விண்ணை முட்டும் விலை… தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரிப்பு

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் 1,04,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து வருகிறது. அதற்குப் போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 25) ஆபரண தங்கம் கிராம் 12 ஆயிரத்து 820 ரூபாய்க்கும், சவரன், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிசம்பர் 26) தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 12 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 1,03,120 ரூபாய்க்கு விற்பனையானது.

அதே போல வெள்ளி விலை கிராமுக்கு, 9 ரூபாய் உயர்ந்து, 254 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 9,000 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன், 1,04,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 274ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ, 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *