சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகமே வியந்து பார்க்கும் ஒன்றாக நிற்கிறது. உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
தமிழ்நாட்டின் முத்திரையாக விளங்கும் இந்த கோயில் பல வரலாற்று சிறப்பம்சங்களையும் பெற்றுள்ளது. மதுரைக்காரர்கள் மட்டுமில்லை ஒட்டுமொத்த தமிழர்களும் இதை நினைத்து பெருமை கொள்கின்றனர். எனவே இந்த பதிவில் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வரலாற்று பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சித்திரை திருவிழா தொடங்கி இங்கு நடைபெறும் திருத்தேர் பவனி, ஆவணி மூல திருவிழா, தை தெப்பத் திருவிழா, ஆடிப்பூரம் ஆகியவை மிகவும் விசேஷம் கொண்டவை.