ஆக-17-ம் தேதி மதுரையில் தவெக இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது. வேறு தேதியை தேர்வு செய்து தருமாறு
காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெறும் என அந்தக் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி மதுரை பாரப்பத்தி அருகே மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் பணி நடைபெற்றுது. அன்றைய தினமே, மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மாநாடு தொடர்பாக அனுமதி மனுவை அளித்தார். இதையடுத்து தவெக மாநாட்டின் ஏற்பாடுகள் பாரபத்தி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால், தவெக மாநாடு தேதியை மாற்றுமாறு அக்கட்சி தலைமையிடம் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து ஆக- 17-ம் தேதி மாநாடு நடத்திக்கொள்வதாக தவெக தரப்பில் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுதந்திர தினத்தை காரணம் காட்டி 17-ம் தேதியும் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்குப் பதில் வார இறுதி நாட்கள் அல்லாமல் ஆக.18 முதல் 22-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தவெக மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேதி அடுத்தடுத்து மாற்றப்படுவதால் தவெகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.