210 தொகுதிகளில் வெல்வது நிச்சயம்- சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்!

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தில் 234 தொகுதிகள் வெல்வது லட்சியம். அதில், 210 தொகுதி வெல்வது நிச்சயம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழக மக்கள் ஏற்றம் பெரும் வகையில் தாம் ஓயப் போவதில்லை என எடப்பாடி பழனிசாமி சூளுரை ஏற்றுள்ளார். அவர் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என எழுச்சி பயணத்தின் 21 நாட்களில், 16 மாவட்டங்களில் உள்ள 61 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி வரலாறு படைத்து, இதில் 25 லட்சம் மக்களை நேரில் சந்தித்து, 42 மணி நேரம் வீர உரையாற்றி வரலாறு படைத்துள்ளார். 3,700 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக வெற்றி பயணத்தை மேற்கொண்டதில் சென்ற இடங்களை எல்லாம் மக்கள் பேரலையாக திரண்டு வரவேற்று சாதனை படைத்தது என்பது ஒவ்வொரு தொகுதிகளிலும் நமக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

7 வது முறை அல்ல 70 ஆண்டுகள் ஆனாலும் திமுகவிற்கு தமிழகத்தில் இடமில்லை அதற்கு எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தில் மக்கள் அலை, அலையாய் திரண்ட காட்சியே நமக்கு சாட்சியாக உள்ளது. கழக கண்மணிகளே எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் புதிய சாதனை படைக்கப் போவது என்பதை மக்களிடத்தில் எடுத்து கூற வேண்டும். அவரின் எழுச்சி பயணம் வெற்றி வரலாறு படைக்கப் போகிறது. 234 தொகுதிகள் வெல்வது நிச்சயம், இதில் 210 தொகுதியில் வெல்வது நிச்சயமாகும் இந்த வெற்றி முழகத்தை மக்களிடத்தில் எடுத்துரைக்க உடனே புறப்படுங்கள். ஒவ்வொரு மாவட்டம் தோறும் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள்மாற்றுத்திறனாளிகள், அனைத்து தரப்பினரையும் தாய் உள்ளத்தோடு அரவணைத்து குறைகளை கேட்டு வருகிறார். நிச்சயம் எடப்பாடி பழனிசாமி புதிய சகாப்தம் படைப்பார். எட்டு திசை எங்கும் வெல்வது நிச்சயம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் புரட்சித் தலைவர்,புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஏழை எளிய ஜனநாயக ஆட்சி மலரும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *