சென்னை:விரைவு ரயிலில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்பு மணி ரயில்வே துறையை வலியுறுத்தி உள்ளார்.
ஏழைகளால் ஏ.சி. பெட்டிகளில் பயணிக்க முடியாது: விரைவு ரயிலில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது!
தமிழ்நாட்டில் இயக்கப்படும் சேரன் விரைவுரயில், சென்னை – திருவனந்தபுரம் மெயில், நீலகிரி விரைவு ரயில் , நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில் ஆகியவற்றில் உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளைச் சேர்க்க ரயில்வேதுறை முடிவு செய்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த நடைமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.இது ஏழை மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துவதாக இருக்கும்.
சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி ஏ.சி வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும்.