சென்னை: ”கன்னடம் மொழி தமிழில் இருந்து உருவாகவில்லை என்று வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபித்துவிட்டால் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள். கமல் மன்னிப்பு கேட்க கூடாது” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: கமல் வரலாற்று பூர்வமான ஆதாரத்தை சொல்லி உள்ளார். தமிழ் உடன் சமஸ்கிருதம் கலந்து பேசி பேசி, அதில் இருந்து பிரிந்து பிறந்த மொழிகள் தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம்.
கன்னடம் மொழி தமிழில் இருந்து உருவாகவில்லை என்று வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபித்துவிட்டால் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள். கமல்ஹாசன் கூறியது வரலாறு. அதை வைத்துக்கொண்டு படத்தை திரையிட அனுமதிக்க மாட்டேன் என்பது சிறுபிள்ளை விளையாட்டு. நாங்கள் நதி நீரை கேட்டாலே உங்களுக்கு பிரச்னை என்றால் என்ன செய்வது?