தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரை தீ ஆணையத் தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வரும் சங்கர் ஜிவால், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், சங்கர் ஜிவாலை, தீ ஆணையத் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்து உள்ளார். கடந்த. 2023 ஜூன் 30-ம் ஆண்டு டிஜிபியா பதவியேற்றுக் கொண்ட சங்கர் ஜிவால் 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் ஜனாதிபதி பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவர் தீ ஆணையத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீ ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டில் அறிவித்திருந்தது. தீத்தடுப்பு முறைகளில் புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும், புதிய பயிற்சிகளை அளிக்கவும், புதிய தட்டங்களை வழங்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிதாக தீ ஆணையம் உருவாக்கப்பட்டு அதில் சங்கர் ஜிவாலுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.