‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து கம்பெனி மூடப்படும்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

‘கோல்ட்ரிப்’ மருந்து உற்பத்தி கம்பெனி நிரந்தரமாக மூடப்படும். என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் மருந்து நிறுவனத்தின் ‘கோல்ட்ரிப்’ என்ற இருமல் மருந்தை குடித்து மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் சிறுநீரகங்கள் செயல் இழந்ததால் இந்த இறப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்படது. மேலும், கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து விற்பனை ரத்து செய்யப்பட்டது.

குழந்தைகளின் சிறுநீரக செயழலிப்புக்கு காரணமாக கூறப்படும் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தில், பெயின்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் டை எத்திலீன் கிளைசால் என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந்த மருந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், * ‘கோல்ட்ரிப்’ மருந்தில் நச்சுத்தன்மை அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்தது தமிழ்நாடு, மத்தியப் பிரதேசமும், மத்திய அரசும் நச்சுத்தன்மை இல்லை என்று விட்டு விட்டார்கள்.  சரியாக ஆய்வு செய்யாத மூத்த மருந்து ஆய்வாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விசாரணைக்குப்பின் நிரந்தரமாக மூட முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *