சென்னையில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னையில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் புரமோத் யாதவ். 35 வயதாகும் இவர் சென்னை எழும்பூரில் உள்ள இனிப்புக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

இந்நிலையில், இரவு நேரத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கும் பெண் ஒருவர், அந்த பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு சென்ற புரமோத் யாதவ், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

போலீசார் வழக்கு பதிவு

அந்த பெண் கூச்சல் போடவே, அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதன்பேரில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் புரமோத் யாதவை போலீசார் கைது செய்தனர். சென்னையில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *