திண்டுக்கலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின், அங்கிருந்து காரில் மதுரை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு மதியம் கார் மூலம் மதுரை விமான நிலையத்துக்குப் புறப்பட்டார். மதுரை தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில் பகல் 12.50 மணிக்கு முதல்வர் சென்ற காரின் இடது முன்பக்க டயர் திடீரென வெடித்தது.
கார் ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு, பெரும் விபத்தை தவிர்த்து விட்டார்.
அதன்பின்னர், உடனே முதல்வரின் காருக்கு வேறு ஒரு டயர் மாற்றப்பட்டு பின்பு, முதல்வர் மதுரை விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.
முதல்வர் பயணித்த காரின் டயர் திடீரென்று வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் வெறும் விபத்து தான் என்றும் திட்டமிட்ட செயல் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
