வங்கக்கடலில் நாளை மறுநாள் (ஆக.18) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா ஆகிய கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது என்றும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஆக.17-ம் தேதி முதல்21-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.